அமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது

அமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது

சிரியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்துள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பிடிபடாமல் இருக்க கடந்த 26ஆம் தேதி இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்.

உடன் தனது 3 குழந்தைகளையும் வைத்துக் கொண்டதால் அவர்களும் இறந்தனர். இந்த நிலையில் அவரது சகோதரி ராஸ்மியா அவாத், அவரது கணவர், உறவினர்கள் ஆகியோரை துருக்கி அரசு கைது செய்தது. ராஸ்மியா ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.