ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி : இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி : இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

அடுத்து ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிருக்கான குத்து சண்டை போட்டி ஒன்றில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி – ஆஸ்திரேலிய நாட்டின் கெய்ட்லின் பார்க்கர் மோதினார்கள்.

ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான ராணி இந்த போட்டியில் கெய்ட்லினை வீழ்த்தி தங்கம் வென்றார்.