டெல்டா பகுதியில் விடிய, விடிய பெய்தது மழை

டெல்டா பகுதியில் விடிய, விடிய பெய்தது மழை

பருவமழைதீவிரம்...திருவாரூர்,நாகை,தூத்துக்குடி உள்ளிட்டபகுதிகளில் பரவலக மழை பெய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல்,வலங்கைமான், கொரடாச்சேரி போன்ற பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, கீழ்வேளூர், பூம்புகார் என நாகை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. தூத்துக்குடி கச்சேரிதளவாய்புரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் மணல் மூட்டைகளை கொண்டு அப்பகுதி மக்கள் கரையை பலப்படுத்தினர். மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் அருகே உள்ள செட்டிகுளம் குளத்திற்கு காட்டாற்று வெள்ளநீர் அதிக அளவில் வந்ததால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.