அடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழிற்நுட்பம் அமல்

அடுத்த ஆண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழிற்நுட்பம் அமல்

நியூயார்க்: ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழிற்நுட்பம்...ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ளதாக லாக்ஹீட் மார்டினின் துணை நிறுவனமான சிகோர்ஸ்கை தெரிவித்துள்ளது.

தானியங்கி மென்பொருள், சென்சார் உதவியுடன் ஒரு விமானி தரையில் இருந்தபடியே ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டரை இயக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

எந்த ரக ஹெலிகாப்டரிலும் பொருந்தக் கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் இருப்பதாகவும், இதை எஸ்.70 பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சோதித்த போது அது அதன் உச்சபட்ச வேகமாகக் கருதப்படும் மணிக்கு 172 மைல் வேகத்தையும் கூட எட்டி சிறப்பாகப் பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது,

தானியங்கியாக சுமார் 54 மணி நேரம் இயக்கி சோதனை மேற்கொண்டதாகவும், அடுத்த ஆண்டில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுவது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அந்நிறுவன இயக்குனர் இகோர் செரெபின்ஸ்கை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.