பிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது டிரைவர் உடல் நசுங்கி பரிதாப மரணம்

பிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது டிரைவர் உடல் நசுங்கி பரிதாப மரணம்

இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு. திருவண்ணாமலை மாவட்டம் வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் ஒரு லாரி டிரைவர். இவர் ராணிப்பேட்டையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை, நாகல் கேனி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை போயிருக்கிறார் .

அப்போது நாகல்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வந்த போது லாரியில் பிரேக் செயலிழந்தது . இதனால் லாரியை நிப்பாட்ட முடியவில்லை. அதனால் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்துவதற்காக டிரைவர் முருகன் வண்டியில் இருந்து கீழே குதித்தார். பின்னர் அவர் அருகில் கிடந்த பெரிய கல்லை லாரியின் முன் சக்கரத்தில் போட்டு நிறுத்த முயன்றுள்ளார் .

அந்தவேளையில் எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரம் முருகனின் மீது ஏறி இறங்கியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . மேலும் டிரைவர் இல்லாமல் சென்ற லாரி அதிர்ஷ்டவசமாக யார் மீதும் மோதாமல் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவர் மீது இடித்து நின்றுள்ளது .இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .