ஐஐடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!

ஐஐடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!
ஐஐடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!

சென்னை ஐஐடியில் நடைபெற்ற 56வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஐஐடி வளாகத்திற்கு வந்த பிரதமர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர், ஐஐடி வளாகத்தில் அமைப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் நடைபெற்ற 56வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.