நான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே

நான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே
நான் சுயலாபத்திற்காக விளையாடவில்லை : ரஹானே

நான் விளையாடுவதற்காக களத்தில் இறங்கிவிட்டால், அணியின் வெற்றிக்காக மட்டும் விளையாடுவேனே தவிர, சுயலாபத்திற்காக, ஒருபோதும் விளையாடியதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டுவென்டி20, ஒருநாள் தொடர்களை வென்ற கையோடு தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.ராகுல் 44 ரன்களும், மயங்க் அகர்வால் 5 ரன்கள், புஜாரா 2 ரன்கள், கேப்டன் கோலி 9 ரன்கள், துணை கேப்டன் ரஹானே 81 ரன்கள் மற்றும் ஹனுமா விஹாரி 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அன்லக்கி அஜிங்கியா ரஹானே : ரஹானே, சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன ( 2017 ஆகஸ்ட், இலங்கைக்கு எதிரான போட்டியில் 132 ரன்கள் ) ஆறு முறை, அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.