பி.பி.சி.யின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ் !!

 பி.பி.சி.யின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ் !!

ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீனில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” இது தனிப்பட்ட வீரர்களுக்கான விருதாகும். ஆனால் நான் குழு போட்டியில் விளையாடி வருகிறேன். இந்த சிறப்பான தருணத்தை அணியில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாழ்க்கையின் கடினமான பாதைகளை கடந்து வந்தேன். அப்போது எனக்கு குடும்பத்தினர் உள்பட நிறைய பேர் உதவியாக இருந்தனர். அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன் ” என்று கூறியுள்ளார்.