ரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள் விற்பனை

ரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள் விற்பனை

மொத்த விற்பனை 10,000 கார்களை கடந்தது.கடந்த அக்டோபர் மாதத்தில் 5000க்கும் ரெனால்ட் டிரைபர் எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியச் சந்தையில் ரெனால்ட் டிரைபர் எம்பிவி கார்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.

நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் 5,240 ரெனால்ட் டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அக்டோபரில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எம்பிவி / எம்யுவி ரகங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை டிரைபர் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் மாருதி எர்டிகா மற்றும் மகிந்திரா பொலீரோ கார்கள் இடம்பெற்றுள்ளன.

முந்தைய செப்டம்பர் மாதத்தில் 4,710 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மொத்தமாக 9,950 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 10,000 கார்கள் தெடலிவரி செய்யப்பட்டு விடடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.4 மீ.க்கும் குறைவான நீளம் கொண்ட எம்பிவி ரகத்தில் ரூ.95 லட்சம் ஆரம்ப விலையில் 7 சீட்டர் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டதால் இந்தக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அதிகபட்ச விற்பனை கொண்ட ரெனால்ட் நிறுவனத்தின் காராகவும் டிரைபர் மாறியுள்ளது.

நான்கு ஏர் பேக்குகள், ஆட்டோமேடிக் டோர் லாக்கிங், பின்புற பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்துள்ளதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.