தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மண்டல வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.                             அதில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர்,அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.                                                                                     அதே போல, மேலும், அடுத்து வரும் 3 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.