’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

நாயகன் செந்தூர் பாண்டியன் படிச்சிட்டு வேலைக்கு போகாம, கதல்ன்ற பேர்ல செல்போன்ல பெண்கள் கிட்ட பேசுறது, அவங்களை தியேட்டருக்கு அழைச்சுனு போறதுன்னு இருக்கார்.

இதுக்கு நடுவில் பேஸ்புக் மூலம் பிரண்டா ஆகிற நாயகி ப்ரீத்தி கரனை அவங்க பிறந்தநாளன்று சந்திக்கிறார் செந்தூர் பாண்டியன். நாயகியையும் தியேட்டருக்கு கூப்பிடறார். அவங்க தியேட்டர் வேணாம், பூம்புகார் போலாம்னு சொல்றாங்க. நாயகன் நாயகி ரெண்டு பேரும் பூம்புகார் போறாங்க. அஙக போய் நாயகன் தப்பான நோக்கத்தில் பழகுகிறார். அதுக்கு நாயகி ஒத்துவரலை. நாயகன், நாயகி மனநிலை என்னன்னு சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.

நாயகனா நடிச்ச செந்தூர் பாண்டியனுக்கு இது முதல் படமா இருந்தாலும், இன்றைய இளைஞர்கள் போல் இயல்பா, யதார்த்தமா நடிச்சிருக்கார்.

நாயகி ப்ரீத்தி கரனும் எளிமையா, இன்றைய பென்கள் எப்படி தைரியமா இருக்கனும்ன்றதை அருமையா வெளிப்படுத்தி நடிச்சு இருக்காங்க.

படத்தில் நடித்த பூர்ணிமா ரவி, தமிழ் செல்வி என படத்தில் நடித்திருக்கும் எல்லோரும் கொடுத்த வேலையை க்ரெக்டார் செஞ்சிருக்காங்க.

ஒளிப்பதிவு செஞ்ச உதய் தங்கவேல் காட்சிகளை எளிமையா படமாக்கியிருக்கார்.

இசை பிரதீப் குமார், பாடல்கள் அருமையா அமைச்சிருக்கார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு படமா இல்லாம பாடமா இயக்கிய பிரசாத் ராமர் பாரட்ட பட வேண்டியவர்.