ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
JAYA TV DEEPAVAI SPECIALL PROGRAMMES
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவி தீபாவை சிறப்பு நிகழ்ச்சிகள்


ஜெயா டிவி தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம்

ஜெயா டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக சொல்லின் செல்வர் திரு.பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகவுள்ளது.

பண்டிகைகளால் நமக்கு நிம்மதியா? நெருக்கடியா? என்ற தலைப்பில் நெருக்கடியே! என வாதிடுவோர்: "நல்லாசிரியர்" திரு. ரவிக்குமார்,"நகைச்சுவை வேந்தன்" தமிழ் நெஞ்சன், "இன்சொல்அரசி" VJ நர்மதா ஆகியோரும்,

நிம்மதியே! என வாதிடுவோர் : "நாவரசி" சேலம் ஐஸ்வர்யா,"இசைக்கலைமணி" இராஜபாளையம் உமாசங்கர், "இலக்கிய இளவல்" தாமல் சரவணன் ஆகியோரும் பங்கேற்று சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இந்த சிறப்பு பட்டிமன்றம் தீபாவளி அன்று 2410-22 திங்கள் கிழமை காலை 9:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

 

“ஜாலி ஓ ஜிம்கானா”

ஜெயா டிவியில்  தீபாவளியை முன்னிட்டு நகைச்சுவை நடிகர் மதுரை முத்து  தலைமயில் தமிழகத்தின்  திறமையான ஸ்டாண்டப்  காமெடியன்கள்  அன்னபாரதி ,கல்பாக்கம் காயத்திரி , பழனி  நீலவேணி , போன்றவர்கள் ஜெயா மேக்ஸ் தொகுப்பாளர்களுடன் இணைந்து கலக்கும் காமெடி நிகழ்ச்சி “ஜாலி ஓ ஜிம்கானா”.  மேலும் விரைவில் வெளி வரவிருக்கும் பவுடர் சினிமா திரைப்பட குழுவினரும் இணைந்து கொண்டாடும்  நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா இந்த நிகழ்ச்சியானது தீபாவளி அன்று 24-10-22 திங்கள் கிழமை மதியம் 12.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

“தீபாவளி மலர்”

ஜெயா டிவியில் தீபாவளியன்று காலை 7.30 மணிக்கு தீபாவளி மலர் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல பத்திரிகைகள் ஆண்டுதோறும் வெளியிடும் தீபாவளி மலர் புத்தகம் வாசகர்களிடையே மிகவும் பிரசித்தம்.  அச்சில் வெளியாகும் தீபாவளி மலரின் திரை வடிவமே இந்த ‘தீபாவளி மலர்’ நிகழ்ச்சி. இதில், நடிகை ஊர்வசி, நடிகர் சரத்குமார், நடிகர் நட்டி, நடிகர் அஸ்வின், எழுத்தாளர் ஜெயமோகன், டிரம்ஸ் சிவமணி உட்பட பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அதோடு, அருளுரை, ஆலய தரிசனம், ராசி நல்ல ராசி உள்ளிட்ட ஆன்மீக பகுதிகளும் இடம்பெறுகின்றன. இரண்டு மணிநேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், காண்போருக்கு தீபாவளி மலர் படித்த முழுமையான திருப்தியையும் அளிக்கும் என சேனல் தரப்பில் கூறுகின்றனர்.

 

“டம்மி பட்டாசு”

ஜெயா டிவியில் தீபாவளியன்று மாலை 4:30 மணிக்கு காமெடி கவியரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் காமெடி நடிகர்கள் முல்லை, கோதண்டம் மற்றும் பல பேச்சாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அவர்களுடைய அரங்கம் அதிரும் காமெடி பேச்சால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. தீப ஒளித்திருநாளில் புத்தாடை,பலகாரம்,பட்டாசு,தலைதீபாவளி என்று நம் இல்லங்களில் நடக்கும் அனைத்து தீபாவளி களேபரங்களை ஒருமித்தமாக சிரிப்பு கவியரங்கமாக கொடுத்திருப்பது தான் இந்த டம்மி பட்டாசு என்ற சிரிப்பு கவியரங்கம் நிகழ்ச்சி….. காணத்தவறாதீர்கள்.

 

 “இசை நாயகன்”

தற்போது வெள்ளி திரையில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சீதாராமன் திரைப்படம் மற்றும் ஜாக்பாட் ,காளிதாஸ், ஜிங் ஜிங் ஜக், உரியடி போன்ற படங்களுக்கும் ,பல மொழி திரைப்படத்திற்கு  இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தீபாவளி தினத்தன்று இரவு 9:30 மணிக்கு ஜெயா டிவியில் “இசை நாயகன்” நிகழ்ச்சியில் நேயர்களுடன் தன்  திரை அனுபவங்களை  பகிர்ந்து கொள்கிறார் .

அவர் தான் கடந்து வந்த பாதை மற்றும் இசை பயணத்தையும், திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.மேலும் அவர் இசையமைத்த பல பாடல்களை தன் குழுவினருடன் இசையமைத்து பாடும் இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு விருந்தாக அமையும் .