மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.டி.தங்கவேல் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் (69).  இவர் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக  2011 முதல் 2016 வரை பொறுப்பு வகித்தார்.       

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்.13) அதிகாலை 2.24 மணியளவில் காலமானார்.