அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயா்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 79.58 ஆக இருந்தது. இந்த நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயா்ந்து 77 ரூபாய் 74 காசுகளாக உள்ளது. இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் 239.3 புள்ளிகள் உயர்ந்து 53,753.45 ஆகவும், நிஃப்டி 74.7 புள்ளிகள் உயர்ந்து 16,041.35 ஆகவும் உள்ளது.