குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்.. MTV Splitsvilla X5ல் அடுத்த ஸ்பெஷல்!

மும்பை: சன்னி லியோன் மற்றும் தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோவில் இந்த வாரம் புதிதாக காதல் குகையை சன்னி லியோன் அறிமுகப்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அழகான பெண்கள் மற்றும் சிக்ஸ்பேக் ஆண்கள் என மொத்தமாக 21 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் 3 பேர் அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டு பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், சன்னி லியோன் அடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக காதல் குகை என்கிற கான்செப்ட்டை சிறந்த காதல் ஜோடிக்காக இந்த வாரம் அறிமுகப்படுத்தி உள்ளார்.

முதல் எலிமினேஷனில் மூன்று பேர் காலி: முதல் முறையாக நடைபெற்ற எலிமினேஷனில் 3 பேர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரிக்கா, நிதி மற்றும் ராகுல் உள்ளிட்ட மூன்று பேர் MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். தனுஜ் இந்த மூவரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு திரும்பிய நிலையில், காதலர்களை குஷிப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்.

காதல் குகை: Love Den என அழைக்கப்படும் காதல் குகையை இந்த சீசனில் முதல் முறையாக சன்னி லியோன் அறிமுகப்படுத்தி உள்ளார். இதில், தனியாக ஒரு ரவுண்ட் பெட் மற்றும் ஜக்குஸி, சாக்லெட் ஃபவுண்டெயின் என காதலர்கள் தனியாக தங்கள் காதலை மேலும், வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக ஏகப்பட்ட பிரைவேட்டான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் அந்த லக்கி ஜோடி: இந்த சீசனில் காதல் குகை என அழைக்கப்படும் பிரைவேட்டான இடத்திற்கு சென்று தங்கள் காதலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் லக்கி ஜோடியாக அக்ரிதி மற்றும் ஜஸ்வந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவருக்கும் இடையே தான் சமீபத்தில் காதல் தீ பற்றிக் கொண்டது. அந்த இருவரும் தான் இந்த சீசனில் முதல் முறையாக காதல் குகைக்குள் சென்று செம ரொமான்ஸ் செய்யவுள்ளனர்.

டென்ஷனும் இருக்கு: அக்ரிதி மற்றும் ஜஸ்வந்த் காதலுக்கு ஆப்படிக்கும் விதமாக சச்சினின் பொறாமை குணமும் சேர்ந்து இந்த காதல் ஜோடியை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்கிற சூழ்ச்சி வலையும் தீட்டப்பட உள்ள நிலையில், ரசிகர்களுக்கு தேவையான டென்ஷனும் அதிகமாகவே இந்த நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்பிளிட்ஸ்வில்லாவில் இருக்கும் போட்டியாளர்கள் ஸாரா ஸாரா சவாலுக்கு ரெடியாகி உள்ள நிலையில், நிகழ்ச்சி தீப்பற்றிக் கொண்டது. சிவெட்டுக்கு எதிராக அக்ரிதியின் குற்றச்சாட்டு, டீக்கிலாவின் சாய்ஸ்க்கு எதிராக சச்சின் அதிருப்தி மற்றும் உனாதி - திக்விஜய் சிங் பஞ்சாயத்து என நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியிருக்கிறது.

டெட்லாக்: மேலும், 5 ஜோடிகள் டெட்லாக்கில் சிக்கிய நிலையில், ஜோடிகள் மாறுவதற்கான வாய்ப்புகள், காதல், மோதல் பஞ்சாயத்து என MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வேறலெவல் என்டர்டெயின்மென்ட்டை கொடுத்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.