கலைஞர் தொலைக்காட்சியில் "சொப்பன சுந்தரி" - கிறிஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படம்
கலைஞர் தொலைக்காட்சியில் "சொப்பன சுந்தரி" - கிறிஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படம்
கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 25-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
"லாக்கப்" படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன், மைம் கோபி, தீபா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கினறனர்.
காரை மையமாக வைத்து குடும்பத்திற்குள் நடக்கும் சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். வறுமையில் வாடும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துக்கு குலுக்கலில் கார் பரிசாக விழ, அதனை உரிமை கொண்டாட அண்ணன் கருணாகரன், மாமா மைம் கோபி என வரிசைகட்ட பிரச்சனை காவல் நிலையம் வரை செல்ல என விறுவிறுப்பான திரைக்கதையில், காமெடி களைகட்டும் படமாக "சொப்பன சுந்தரி" உருவாகியிருக்கிறது.