SHE AWRADS 2021 - பிசினஸ், சினிமா, பேஷன், மாடலிங் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக ‘ஷீ’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
SHE AWRADS 2021
பிசினஸ், சினிமா, பேஷன், மாடலிங் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை கெளரவிக்கும் விதமாக ‘ஷீ’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அக்டோபர் மாதம் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. அக்டோபர் மாதம் உலகளவில் மார்ப்க புற்றுநோய் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
SHE 2021 ம் ஆண்டுக்கான விருதுகளை மடோனா செபஸ்டின், ரெஜினா கசாண்ட்ரா, மேகா ஆகாஷ், அனுபாமா பிரிக்ஷம், அஞ்சனா ரங்கன், ஹெரிகா பெர்னாண்டஸ், டோனல் பிஸ் மனிஷா சிங் உட்பட ஏராளமான பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகள் குறித்து இதன் நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், ‘ஷீ’ விருதுகள் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் உழைப்பால் உயர்ந்து சாதனைப் படைத்துள்ள பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கும் வழங்கி வருகிறோம். வருகின்ற 2022 ஆண்டு ஜனவரி மாதம் இந்த விருது விழாவை வெகு பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்’ என்றார்.