ரஞ்சிதா - வேதவல்லி சந்திக்கும் முக்கிய நிகழ்வு - நடக்கப்போவது என்ன?
"ரஞ்சிதமே"
ரஞ்சிதா - வேதவல்லி சந்திக்கும் முக்கிய நிகழ்வு - நடக்கப்போவது என்ன?
கலைஞர் தொலைக்காட்சி - விகடன் டெலிவிஸ்டாஸ் கூட்டணியில் திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "ரஞ்சிதமே" புத்தம் புதிய மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடர் தற்போது வேதவல்லி - ரஞ்சிதா சந்திக்கும் முக்கிய கட்டம் வர இருக்கிறது.
இனியன் தினேஷ் இயக்கியிருக்கும் இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அக்கா கணவரிடம் இருந்து தப்பி சென்னை வந்த ரஞ்சிதாவும், அம்மாவுக்கு செல்ல பிள்ளையான அருணும் சந்தித்து பழக ஆரம்பிக்கும் வேளையில், ரஞ்சிதாவை அவளது மாமா தீனாவின் நண்பன் பார்க்க, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் ரஞ்சிதா, தீனாவிடம் சிக்குவாளா? மறுபுறம் அருணுக்கு பார்த்த பெண்ணை குடும்பத்தோடு வேதவல்லி நேரில் சென்று பார்க்க, ரஞ்சிதாவின் நினைப்பில் இருக்கும் அருண் எடுக்கப்போகும் முடிவு என்ன? மற்றும் தொடரின் முக்கிய நிகழ்வான ரஞ்சிதாவும், வேதவல்லியும் சந்திப்பதும் வரவிருப்பதால் தொடர் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.