முரசு டிவியின் மூவி மேனியா
முரசு டிவியின் மூவி மேனியா
அனைத்து வயதினரையும் கவரும் முரசு டிவி திரைப்படங்கள்
கலைஞர் நெட்வொர்க்கில் ஒரு அங்கமாக இருக்கும் முரசு தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் திரைப்படங்கள் ஒளிரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் வியாழன் வரை காலை 11:00 மணிக்கு “காவியக் காலை” தலைப்பில் 90-களில் ஹிட்டடித்த படங்களும், மதியம் 3:00 மணிக்கு “கிளாசிக் மேட்னி” தலைப்பில் 80-களில் வெற்றிநடை போட்ட படங்களும், மாலை 6:00 மணிக்கு “சூப்பர் ஹிட் ஷோ” தலைப்பில் காதல், காமெடி, குடும்பம் என அனைத்தும் கலந்த சூப்பர்ஹிட் திரைப்படங்களும், இரவு 9:00 மணிக்கு “முரசு நைட் ஷோவில்” மனதை மயக்கும் மிக்ஸ்டு திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.
அதேபோல், வெள்ளிதோறும் மாலை 6:00 மணிக்கு “வெள்ளிப்பரிசு” தலைப்பில் மாஸான அதிரடி திரைப்படங்களும், சனிக்கிழமை பகல் 12 :00மணி மற்றும் மதியம் 3:00 மணிக்கு “சூப்பர் சர்டடே” தலைப்பில் இளம் வயதினரை கவரும் சிறப்பு படங்களும், மாலை 6:00 மணிக்கு அந்த வார ஸ்பெஷல் மூவிசும் திரையிடப்படுகின்றன.
சனிதோறும் இரவு 9:00 மணிக்கு “காதல் பரிசு” தலைப்பில் காதல் திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பாகும்.
ஞாயிறு அன்று, பகல் 12:00 மணிக்கு “மகளிர் மட்டும்” தலைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய படங்களும், மதியம் 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு “சன்டே சரவெடியாக” அடுத்தடுத்து சூப்பர்ஹிட் திரைப்படங்களும், ஞாயிறுதோறும் இரவு 9:00மணிக்கு திகில் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. அனைத்து வயதினரையும் கவரும் முரசு தொலைக்காட்சியின் சிறப்பு திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.