வீக் ட்ரென்ட்ஸ் ( week trends)
நகைச்சுவைக்கு எப்பொழுதும் ஒரு பலம் உண்டு . ஒரு நகைச்சுவையோடு ஆழமான கருத்தை பதிவிட்டால் ,நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ,சிந்திக்க வைக்கும் . அதிலும் வாரம் முழுவதும் நடைபெறும் ட்ரெண்டான நிகழ்வுகளை மூன்று சுவாரசியமான தொகுப்புகளுடன் உங்களது பொழுதுபோக்கினை மேலும் சிரிப்பூட்டும் வகையில் முதல் முறையாக மூன் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 8:00 மணிக்கு வீக் ட்ரென்ட்ஸ் (week trends) நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
அரசியலில் வாரம் முழுவதும் ட்ரெண்டாகிய விஷயங்களை சமூக அக்கறையுடன் கூடிய வேடிக்கைகள் நிறைந்த பகுதி தான் 'அரசியல இதெல்லாம் சாதாரணம்' .
சினிமாவில் நடக்கும் அப்டேட்ஸ் , மீம்ஸ்,விமர்சனம் போன்ற வேடிக்கைகளுக்கு பஞ்சமில்லாமல் முழுக்க ஒரு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த பகுதி படப்பெட்டி .
இறுதியாக விளையாட்டு நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்வதே 'எப்ப பாரு விளையாட்டு' பகுதி .
'அரசியல இதெல்லாம் சாதாரணம்,படப்பெட்டி ,எப்ப பாரு விளையாட்டு போன்ற மூன்று வித்தியாசமான பகுதிகளுடன் வாரம் முழுவதும் நடைபெறும் ட்ரெண்டான விஷயங்களை ட்ரோல் செய்து அதை நமக்கு சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தினகரன் தயாரிப்பில் தொகுப்பாளர்கள் சிவா-ஜெய் கணேஷ் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள் . வீக் ட்ரென்ட்ஸ் ஞாயிறுதோறும் மூன் தொலைக்காட்சியில் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.