சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் எம்ஜிஆர் சிலை அமைக்க ஒன்றிய அரசுக்கு எம்.பி. தம்பிதுரை கோரிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியதற்கு பிரதமர் மோடிக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் எம்ஜிஆர் சிலை அமைக்கவும் ஒன்றிய அரசுக்கு எம்.பி. தம்பிதுரை கோரிக்கை வைத்தார்.மாநிலங்களவையில் ரயில்வே மானிய கோரிக்கை மீது பேசிய அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, 'சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள சென்னை - பெங்களூரு ரயில் பாதையில் நெரிசல் அதிகரித்ததால் புதிய பாதை தேவை.ஜோலார்பேட்டையில் இருந்து ஓசூர், பர்கூர் வழியாக பெங்களூருவுக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு வரை உள்ள ரயில் பாதையை இரட்டை பாதையாக்க வேண்டும்.தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ரயில் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் நடந்து வரும் ரூ.28,370 கோடி மதிப்பீட்டிலான பணிக்கு வெறும் ரூ.3,865 கோடியே பட்டேஜ்ட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை வழியே தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் நெரிசல் அதிகரித்ததால் புதிய பாதை தேவை.சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடலூர் வழியாக கடற்கரை ஓரமாக ரயில் பாதை அமைக்க வேண்டும்,'என்றார்.