அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனைகள்

அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனைகள்
அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனைகள்

சர்வதேச அலைச்சறுக்கு போட்டியின் 4வது நாளான நேற்று காலிறுதி ஆட்டங்கள் காலை முதல் மதியம் வரை மாமல்லபுரத்தில் நடந்தது. இதில் மகளிர் பிரிவில் இந்தியா, இலங்கை, மடகாஸ்கர், சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வீராங்கனைகள் 2 குழுக்களாக பிரிந்து காலிறுதி போட்டியில் பங்கேற்றனர். இந்த 2 பிரிவுகளிலும் பங்கேற்ற ஜப்பான் நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மாட்சுடா, நகாஷியோ ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். மேலும், போதிய அளவு கடலில் அலைகள் எழும்பாததால் மாலை 5 மணி வரை நடக்க வேண்டிய போட்டி ஒரு மணிக்கு முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மதிய, உணவிற்கு பிறகு வீராங்கனைகள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டனர்.