உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறினர்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறினர்
உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறினர்

பெக்கு: உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியில் இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு இரண்டாவது இந்தியராக பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளர். உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அரையிறுதிப்போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி 18 வயதான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுக்களும் சமனில் முடிந்த நிலையில் 3ம் சுற்று போட்டி நடந்தது. டை பிரேக்கரில் 3.5 – 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 3ம் நிலை வீரருக்கு அதிர்ச்சி அளித்தார். முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.