விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்

 

ஜெயா டிவியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று காலை 9.30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

 

இறை நெறியிலும், இல்லற நெறியிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

 

இறை நெறியிலும், இல்லற நெறியிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களே என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், திரு.தாமல் சரவணன் ஆகியோரும், பெண்களே என்ற அணியில் திருமதி.சுசித்ரா, திருமதி.கார்த்திகா, திருமதி.எழிலரசி ஆகியோரும் பேசுகின்றனர்.

 

இரு அணிகளை சேர்ந்தவர்களும் சிரிப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் பல கருத்துக்களை அழகிய தமிழில், நேர்த்தியுடன் முன்வைத்தனர்.

 

நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் வழங்கியுள்ளார்.