சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்கவைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்கவைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்கவைத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரசாயனம் கலந்து பழுக்கவைத்த 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த பழங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இவை குடோனில் வைக்கப்பட்ட மாம்பழங்களை கடைகளில் வைக்கப்பட்டிருந்த மாம்பழம், பெட்டியில் ரசாயன கலவை கலந்து மாம்பழம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது, இதனை அடுத்து அதிகாரிகள் உடண்டியக சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து சுமார் 2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து துப்புரவு படுத்தியுள்ளனர்.

மேலும் ரசாயன பொடிகளை கலந்து விற்பனை செய்யப்பட்ட வாடிக்கையாளர்களையும் மற்றும் வியாபாரிகளையும் கடுமையாக எச்சரித்தும் அந்த பகுதியில் இருந்து சென்று இருக்கின்றனர். இதனை அடுத்து அந்த கடைகளுக்கு சுமார் 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

மேலும் ரசாயனம் கலந்து விற்கக்கூடிய பழங்களை பொதுமக்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தொடர்ந்து ஈடுபடக்கூடிய கடைகளின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படப்போவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிக வெளி மாநிலங்களில் இருந்து வந்து மாம்பழங்களை பொதுமக்கள் வாங்கி செல்ல சூழ்நிலையில், தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் தற்போது டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மாற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

மேலும் இது போன்று தொடர்ந்து ஈடுபடக்கூடிய கடைகளை விவரங்களை சேகரித்து அதிகாரிகள் அதனை அரசு குடோனுக்கு அனுப்பி வைத்து பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் ஏற்படும் பச்சத்தில் அவரகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.