ஊட்டி என்.சி.எம்.எஸ்., அருகே தீ விபத்து !
ஊட்டி என்.சி.எம்.எஸ்., அருகே தீ விபத்து !
நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரிக்கிறது. வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் ஊட்டி நகர் பகுதியில் ஆங்காங்கே இருந்த புல்வெளிகளும் கருகி காணப்படுகின்றன. ஊட்டியில் இன்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து என்.சி.எம்.எஸ்., செல்லும் சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இணைந்து தண்ணீர் ஊற்றியும், மர கிளைகளை வைத்தும் தீ பரவுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் சூழ்ந்ததால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் தூசி அந்த பகுதி முழுவதும் பரவியது. பொதுமக்கள் ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட்டதால் இந்த தீ விபத்தால் பெறும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக தீ பரவுவதை பார்த்தவர்கள் தெரிவித்தனர்