கியூபா திரைப்பட விழா 2024
கியூபா திரைப்பட விழா 2024
சென்னை, நவம்பர் 15, 2024—
இந்தியாவில் உள்ள கியூபா குடியரசின் தூதரகத்துடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) நடத்தும் கியூபா திரைப்பட விழா 2024 இன்று துவங்கியது.
இந்த சிறப்பு மூன்று நாள் நிகழ்வு நவம்பர் 15 முதல் 17, 2024 வரை சென்னை, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏ.வி.எம். ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினர் திரு. எஸ். விஜயகுமார், IFS, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, சென்னை, MEA கிளை செயலகத் தலைவர், தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசிய கருத்துக்கள், திரைப்படங்களில் கலாச்சார ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இதே கருத்தினை திரு. சிவன் கண்ணன், ஐசிஏஎஃப் தலைவர், அவர்களும் வழிமொழிந்ததோடு திரு. எஸ். விஜயகுமார் அவர்களை முறையாக வரவேற்று கெளரவித்தார்.
இந்த விழாவின் முதல் நாளான இன்று, கியூபா சினிமாவின் மெய்ப்பொருளைக் காட்டும் படம் கான்டிகோ பான் ஒய் செபொல்லா (Contigo Pan y Cebolla) திரையிடப்பட்டது, இந்த திரைப்படம் குடும்ப உறவுகளையும், எளிய மகிழ்ச்சிகளையும் சித்தரித்தது. இந்த திரைப்படம் உணர்ச்சிகரமான கதை மற்றும் நகைச்சுவையால் பார்வையாளர்களை கவர்ந்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கான திரைப்படங்களின் விவரம் :
நாள் 2 (நவம்பர் 16): விவா கியூபா மற்றும் தி மேஜர் - விவா கியூபா, குடும்பச் சண்டையின் பின்னணியில் அமைந்த சிறுவயது நட்பின் அழகான கதை, அதைத் தொடர்ந்து தி மேஜர், துன்பங்களை எதிர்த்து நிற்பவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் படம்.
.நாள் 3 (நவம்பர் 17): இன்னோசென்ஸ் அண்ட் தி ஐ ஆஃப் தி கேனரி - கியூபாவின் வரலாறு மற்றும் சமூகத்தை ஆழமாக ஆராயும்படம், இன்னசென்ஸ், கேனரியின் கண், கியூபாவின் சிக்கலான கடந்த காலத்தை பற்றி பேசும் படம்.
ஒவ்வொரு படமும் கியூபாவின் வாழ்க்கை மற்றும் மதிப்புகள் பற்றிய ஒரு உண்மையான பார்வையை வழங்குகிறது, இது சென்னையின் சினிமா விரும்பும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.
நிகழ்வு விவரங்கள்:
* தேதி: நவம்பர் 15, 16 மற்றும் 17, 2024
* நேரம்: மூன்று நாட்களிலும் பிற்பகல் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை
* இடம்: AVM ஆடிட்டோரியம், ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 130A, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம், சென்னை - 600092
கியூபாவின் கலாச்சாரம் மற்றும் அதன் அற்புதமான கதைகளை அனுபவிக்க விரும்புவோர் தவறாது கலந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.