வினாயகர் சதுர்த்தியையொட்டி அற்புதமான நிகழ்ச்சிகளை வரிசையாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
வினாயகர் சதுர்த்தியையொட்டி அற்புதமான நிகழ்ச்சிகளை
வரிசையாக ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
------------
செப்டம்பர் 9, 2021 வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாள்
கொண்டாட்டங்களை வழங்குகிறது
-----------
வியாழக்கிழமை முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை
டியூன் செய்து நிகழ்ச்சிகளை பார்த்து உற்சாகமடையுங்கள்
சென்னை, செப். 10, 2021: வினாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தங்களின் தனித்துவமான வழியில் கற்பனை நிறைந்த மற்றும் கற்பனை அல்லாத பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
கலர்ஸ் தமிழின் மெகா ஹிட் நிகழ்ச்சியான ‘இதயத்தை திருடாதே’ தொடரின் சஹானா (ஹிமா பிந்து) மற்றும் சிவா (நவின் குமார்) ஆகியோரின் பிரபலமான கணபதி நடனத்துடன் செப்டம்பர் 9-ம் தேதி இரவு 8.30 மணிக்கு கொண்டாட்டம் தொடங்குகிறது.
செப்டம்பர் 10-ந்தேதி அன்று இரவு 9.30 மணிக்கு புகழ்பெற்ற தொடரான அபி டெய்லர் தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் வையாபுரி மற்றும் நடிகை நச்சத்திரா ஆகியோர் சடங்கு பூஜையை நடத்துகின்றனர். இரவு 10.30 மணிக்கு, சில்லுனு ஒரு காதல் முழு குழுவினரும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட உள்ளனர். நகைச்சுவை நடிகர் சேது சுப்பிரமணி அவர்களுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 12-ந்தேதி சன்டே சினி காம்போவில் மதியம் 1 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு நிப்பான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ வழங்கும் சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்னும் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா நடித்த முதல் திரைப்படம் இதுவாகும்.
மாலை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கலக்கல் காமெடி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை கேட்பரி 5 ஸ்டார் இணைந்து வழங்குகிறது. இதில் சிறப்பு விருந்தினராக சஞ்சிதா ஷெட்டி கலந்து கொள்கிறார். அவர் இந்நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான விளையாட்டுகளிலும், மன்னர் ஜல்சாவுடன் (ரோபோ சங்கர்) சிறிய உரையாடலிலும் பங்கேற்பார்.
எனவே செப்டம்பர் 9 வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து உங்கள் வினாயகர் சதுர்த்தியை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்றுங்கள்.
//