சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், ஜேஜே நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மர்ம நபர் மூலமாக மெயிலில் மிரட்டல் வந்துள்ளதாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்ப நாய் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் பள்ளிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மிரட்டல் மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.