இந்திய விடுதலைப் போராட்டத்திலும், ஆன்மீகத்திலும், அரசியலிலும் தனக்கென ஒரு சகாப்த வரலாற்றை படைத்தவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.
இந்திய விடுதலைப் போராட்டத்திலும்,
ஆன்மீகத்திலும், அரசியலிலும் தனக்கென ஒரு சகாப்த வரலாற்றை படைத்தவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.
தனது பொது வாழ்க்கையிலும் அரசியல் பயணத்திலும் மாசு மருவில்லா களங்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்த பெருமைக்குரியவர்.
மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு உற்ற நண்பராகவும் முதன்மை தளபதியாகவும் திகழ்ந்தவர்.
இந்திய நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி தான் போராட வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தீர்மானித்து INA படையினை கட்டமைத்த போது பர்மாவில் உள்ள தமிழர்களையும் தென்தமிழகத்திலுள்ள தமிழர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் படையை அனுப்பி வைத்தவர்.
ஆங்கிலேயரின் கொடுஞ்சட்டமான குற்றப்பரம்பரைச் சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வெற்றி கண்டு தென் மாவட்ட மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிந்தவர்.
தேச விடுதலைக்காகவும் மக்கள் உரிமைக்காகவும் போராடி தனது வாழ்நாளில் 4000 நாட்களை கொடும் சிறையில் கழித்தவர்.
தமிழக அரசியல் வரலாற்றில் தோல்வியே காணாத தலைவர். சிறையிலிருந்தே பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெற்றி கண்ட தலைவரும் இவரே. தமிழக மக்களால் நடமாடும் முருகக் கடவுள் என்று போற்றப்பட்டவர்.
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நுழைவு போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டவர்.
தொழிலாளர் உரிமைக்காக பல போராட்டத்தை முன்னெடுத்து தொழிலாளர் உரிமைகளை பெற்றுத் தந்தவர்.
தனது வாழ்வில் சந்தித்த அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் எண்ணி தனது வாழ்வனைத்தும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து மறைந்தவர்.
தனக்கு சொந்தமான 32 1/2 கிராமத்தை தாழ்த்தப்பட்ட ஏழை எளிய விவசாயிகளுக்கு தானமாக வழங்கியவர்.
வாழ்நாள் முழுவதும் ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து வாழ்ந்தவர்.
எண்ணிலடங்கா சரித்திர சாதனைகளையும் சகாப்தங்களையும் படைத்தவர்
தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.
#MuthuramalingaThevar #Thevar