நடிகர் சரத்பாபு நல்ல நண்பர்; நல்ல மனிதர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
நடிகர் சரத்பாபு நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டியளித்தார். நானும் சரத்பாபுவும் சேர்ந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. சரத்பாபு முன் நான் சிகரெட் பிடித்தால் என்னை அவர் அன்புடன் கடிந்துகொள்வார். நான் சிகரெட் பிடித்தால் சரத்பாபு அதை எடுத்து கீழே போட்டு அணைத்துவிடுவார். சரத்பாபு எனக்கு அருமையான நண்பர்; நல்ல மனிதர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் என ரஜினிகாந்த் கூறினார்.