72வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்!: ரசிகர்கள் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்..பாபா திரைப்படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வம்..!!

72வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்!: ரசிகர்கள் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்..பாபா திரைப்படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வம்..!!
72வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்!: ரசிகர்கள் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்..பாபா திரைப்படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வம்..!!

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய்லர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது. இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரக்கூடிய ஜெய்லர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.

ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல்பாண்டியன் எனவும் தெரியவந்துள்ளது. இதனிடையே சன் பிச்சர்ஸ் சார்பில் ரஜினியை வாழ்த்தி காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு நள்ளிரவு 12 மணியளவில் திரண்ட ரசிகர்கள், கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ரஜினி ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். முன்னதாக ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வில்லிசை பாடல் கச்சேரியும் நடைபெற்றது.

அப்போது 73 கிலோ எடைகொண்ட கேக்கை வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மறுவெளியீட்டில் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் பாபா திரைப்படத்தை காணவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், தனது இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து என குறிப்பிட்டிருக்கும் அவர், ரஜினி உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.