டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ

டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ
டிவி சமையல் நிகழ்ச்சியில் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வந்த போட்டியாளர் வைரலாகும் வீடியோ

பாகிஸ்தானிய சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பாகிஸ்தானின் சமையல் நிகழ்ச்சியான தி கிச்சன் மாஸ்டரின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. சமிஅயல் போட்டியின் போது போட்டியாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள பிரபல கடையிலிருந்து பிரியாணியைக்வாங்கி கொண்டு வந்து உள்ளார். ஆனால் அது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் போட்டியாளர் வெளியேற மறுத்துவிட்டார்.

இது குறித்து போட்டியாளர் கூறும் போது நிகழ்ச்சியின் நடுவர்கள் ருசிப்பதற்காக ஒரு தட்டில் கொண்டுவரப்படும் உணவு நீங்கள் தயாரித்ததாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறவில்லை. இந்த பிரியாணி பார்சலை பெற வரிசையில் நின்று கடுமையாக உழைத்ததாகவும், அதை நடுவர்களுக்கு கொண்டு வருவதற்கு சிரமப்பட்டதாகவும் போட்டியாளர் கருத்து தெரிவித்தார்.

போட்டியாளர் வெளியேற மறுத்து, நடுவர்களுடன் மோதலில் ஈடுபட்டார், நடுவர்களில் ஒருவர் போபத்தில் செட்டை விட்டு வெளியேறினார்.