சூரஜ் பார்தி: சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*

*சூரஜ் பார்தி: கடந்த 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலைப்படைப்பை (Everday) உருவாக்கி வரும் சென்னையைச் சேர்ந்த நியூயார்க் கலைஞர்!*
*சென்னை:* வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத அசல் கலைப்படைப்பை கடந்த 3,000+ நாட்களாக சூரஜ் பார்தி உருவாக்கியுள்ளார். தொடர்ச்சியாக இதை செய்ததன் மூலம் ஒழுக்கம், ஆர்வம், பாரம்பரியம் மற்றும் பரிசோதனை ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஆரம்பித்த இந்த விஷயம் ஒரு தசாப்தம் கடந்து இப்போது அவரது கலை, தத்துவம் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. "இது அவுட்புட் சார்ந்தது மட்டுமல்ல! நம் இருப்பை நிலைநாட்டுவதும், மன ஒருமைப்பாடும் சேர்த்ததுதான்” என்றார்.
தலைசிறந்த புடவை வடிவமைப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தவர் சூரஜ். நெசவாளர் சேவை மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர் அவரது தாத்தா என். வீரப்பன். சில நொடிகளிலேயே கடினமான ஓவியங்களையும் எளிதில் வரையக் கூடியவர். ராணி எலிசபெத், இந்திரா காந்தி மற்றும் ஜாக்குலின் கென்னடி ஓனாசிஸ் ஆகியோருக்கு புடவைகள் உருவாக்கித் தந்த பெருமையைப் பெற்றவர். இதுகுறித்து சூரஜ் பகிர்ந்து கொண்டதாவது, “என் தாத்தா மற்றும் மாமா இருவரும் நெசவுக்காக தேசிய விருதுகளைப் பெற்றவர்கள். தறி மற்றும் ஜாக்கார்டு அட்டைகளுடன் தான் நான் வளர்ந்தேன். அந்த ரிதம் எனக்கு அத்துப்படி. இப்போது, நான் பிக்சல்கள் மற்றும் சென்சார்களுடன் வேலை செய்கிறேன். ஆனால், நெசவு என்னை விட்டு ஒருபோதும் நீங்காது” என்கிறார்.
மோஷன் கிராபிக்ஸ் முதல் இயற்பியல் கணினி வரையிலும் சூரஜ் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். பழைய காலத்தின் நெய்தல் துணிகள் மற்றும் தற்போதைய டிஜிட்டல் டிரெண்ட் என இரண்டிலும் பயணிக்கிறார் சூரஜ். இந்த படைப்புகள், ஸ்டேரிங் ஃபேசஸ் போன்ற சிற்பங்களுடன் நம் கலாச்சாரத்துடன் நிலைத்து நிற்கிறது.
மூகாம்பிகை தேவி சுவரோவியம்: அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று, இசையமைப்பாளர் இளையராஜாவின் சென்னை ஸ்டுடியோவிற்காக கொடுக்கப்பட்ட மூகாம்பிகை தேவி சுவரோவியம். இதற்காக சக கலைஞர் விபா குல்கர்னியுடன் இணைந்த சூரஜ், பல்வேறு தொழில்நுட்பங்களை இணைத்து, தெய்வீகத்தின் அடையாளமாக இந்த ஓவியத்தினை உருவாக்கினார்.
*சென்னையிலிருந்து நியூயார்க் வரை:*
சுராஜின் பயணம் அவரை சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கு அழைத்து வந்தது. அங்கு அவர் சமீபத்தில் NYU டிஷ்சின் இண்டர் ஆக்டிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் புரொகிராமில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் இப்போது Quit With Jones-ல் முன்னணி வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். இதுமட்டுமல்லாது, ஹெல்த் டூல்ஸ் வடிவமைத்தல், கற்பித்தல், வழிகாட்டுதல் மற்றும் கலை உருவாக்குதல் ஆகியவற்றையும் செய்து வருகிறார்.
அவர் ஸ்பெகுலேட்டிவ் AI உருவாக்குபவராக இருந்தாலும் சரி, படைப்புத் துறைகள் மூலம் மாணவர்களை வழிநடத்துபவராக இருந்தாலும் சரி, நெசவு சார்ந்த தரவுகளை பரிசோதனை செய்தாலும் சரி, அல்லது லாரி ஆண்டர்சன் போன்ற உலகளாவிய கலைஞர்களுடன் பணிபுரிபவராக இருந்தாலும் சரி, தினசரி தனது ஓவியப் பயிற்சியை அவர் தவற விடுவதில்லை.
*தற்போது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்:*
சுராஜ் எவ்ரிடேஸின் (Everydays) 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான ஒரு தளமாக வளர்ந்துள்ளது.
• தனது அன்றாட படைப்புகளில் AI தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி,
• பாரம்பரிய நெய்தல் மரபுடன் தற்கால இயந்திர தொழில்நுட்பத்தை இணைப்பது,
• அவரது அன்றாட பணி சார்ந்த முக்கிய விஷயங்களை ஒருங்கிணைப்பது,
“தறிதான் முதல் கணினி. இப்போதும் எப்போது எனது பாரம்பரியத்தைத் தொடர்வேன்” என்கிறார்.