மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம்

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் லீக் ஆட்டமான டெல்லி -மகாராஷ்ட்ரா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஷிகர் தவண் இடது முழங்காலில் காயமடைந்ததால் மே.இ.தீவுகள் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.இதனால் டிசம்பர் 6ம் தேதி ஹைதராபாதில் நடைபெறும் டி20 போட்டியில் தவணுக்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுகிறார்.

ஷிகர் தவண் ஆடிவரும் சொதப்பலான ஆட்டத்தில் அவருக்கு முதலில் அணியில் இடம் கிடைத்ததே கோலி, ரவிசாஸ்திரி, விக்ரம் ராத்தோர் லாபியினால்தான். கிரிக்கெட்டில் பேட்டிங்கை மறந்தது போல் ஆடிவருகிறார் ஷிகர் தவண். இந்நிலையில் காயம் அவரை அணியிலிருந்து விலகச் செய்துள்ளது.

சஞ்சு சாம்சன் அநியாயமாக வாய்ப்பு அளிக்கப்படாமலே மே.இ.தீவுகள் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். எந்த ஷிகர் தவணுக்காக சாம்சனை தேர்வு செய்யாமல் விட்டார்களோ அதே ஷிகர் தவண் இடத்திற்கு சாம்சன் திரும்பியுள்ளார்.ஆனால் நியாயமாக அவர் திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்று அல்லது பதிலி வீரராக அணியில் நுழைவதால் அவரை விளையாடும் 11 வீரர்களில் தேர்வு செய்யாமலேயே விட்டுவிடுவதும் நடந்து வருகிறது.

ஷிகர் தவண் ரன் ஓடும்போது முழு நீள டைவ் அடித்து கிரீஸை தொட முயன்றார் அப்போது அவரது பேடில் இருந்த சிறு மரத்துண்டு அவரது இடது முழங்காலில் கீறியது. ஆழமான காயத்தினால் ரத்தம் கொட்டியது. பிறகு அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது.

இதனையடுத்து எம்.எஸ்.கே.பிரசாத், உடற்கோப்புப் பயிற்சியாளர் கவுஷிக்கிடம் பேசிய போது மே.இ.தீவுகள் டி20 தொடருக்குள் அவர் தேற வாய்ப்பில்லை என்பதனால் அவர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.