தமிழக விவசாயிகளுக்கு இளங்கோவன் ஆதரவு

தமிழக விவசாயிகளுக்கு இளங்கோவன் ஆதரவு
evks elangovan supports tamil farmers protesting in delhi

சென்னை: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துக்கொண்டார். அப்போது விவசாயிகளுடன் பேசிய இளங்கோவன் " உங்களது நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கும்" என்று கூறினார்.

evks elangovan supports tamil farmers protesting in delhi