உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை ....

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை ....

சவுதி அரேபிய அரச குடும்பத்து உறுப்பினர்களில் சுமார் 150 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரியவந்துள்ளது...

அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்...

ஸ்பெயினில் 153,222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 15447 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் 143,626 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18827 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் இத்தாலியில் 601 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 655 பேர் பலியானார்.

ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர்.

பிரான்சில் 117,749 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12210 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில்  66,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4110 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனா 99% கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது,சீனாவில் 77,370 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு 1160 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

யுனைட்டட் கிங்டமில் 65,077 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7978 பேர் பலியாகி உள்ளனர்.

துருக்கியில் 42,282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 908 பேர் பலியாகி உள்ளனர்.

பெல்ஜியத்தில் 24,983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2523 பேர் பலியாகி உள்ளனர்.