ஜீ தமிழ் ச ரி க ம ப - மாற்றுத் திறனாளி குழந்தைகள் இடையே சிறப்பு

சென்னை: 2017 டிசம்பர் 23: கிருஸ்துமஸ் தொடர்பான மகிழ்ச்சிக்கும், குதூகலத்துக்கும் எழில் சேர்க்கும் வகையில் முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிச் சேனலான ஜீ தமிழ், பிரத்யேக சிறப்பு இசை நிகழ்ச்சியை ஆந்திர மகிளா சபா ஐபிடி முடநீக்கியல் மையத்தின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இசை மற்றும் கொண்டாட்டங்களின் உச்சமாக ஜீ தமிழின் பிரபலமான பாட்டு ரியாலிடி ஷோவான ச ரி க ம ப போட்டியாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். பள்ளி விடுமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக, மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக இந்தச் சிறப்பு இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மொழி மற்றும் பேச்சு எல்லைகளைக் கடந்து இதயங்களை இணைக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று கூறிய அர்ச்சனா சந்தோக் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக் கொண்டாட்டங்கள் புன்னகை மற்றும் சிரிப்பலைகளுடன் தொடங்கின. கொண்டாட்டங்களின் போது அர்ச்சனா குழந்தைகளுடன் கலந்துரையாடியதுடன், குழந்தைகளைத் தங்கள் அசத்தலான நிகழ்ச்சிகள் மூலம் மயங்க வைத்த ரியாலிடி ஷோ போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் உச்ச கட்டமாக Sa Re Ga Ma Pa contestants ஆகியோர் பிரபல தமிழ்ப் பாடல்களைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். குழந்தைகள் இதைக் கேட்டுக் குதூகலித்ததுடன் கேட்டு ரசித்த பாடல்களையும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தனர்.
நிகழ்ச்சி பற்றி சேனல் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ‘ஜீ தமிழில் தொடர்ந்து சமூகத்தில் அழகான மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தீவிர முனைவுகளை மேற்கொண்டு வருகிறோம். ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீனில் அவர்களது குதூகலம் மற்றும் மகிழ்ச்சிக்கு எங்கள் நேயர்களுடன் இணைந்து முக்கியப் பங்களிக்கிறோம். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், இளம் உள்ளங்களை மகிழ வைக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கு ஆந்திர மகிளா சபா நிர்வாகத்துக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
ச ரி க ம ப நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா சந்தோக் தொடர்கையில் ‘குழந்தைகளுடன் நேரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது மனதுக்கு இதமான அனுபவத்தைத் தருவதுடன், இசையின் மேஜிக்கைப் பரப்பவும் வாய்ப்பளித்துள்ளது. நன்றி தெரிவித்தல் தொடர்பான பாடமாக இந்த நிகழ்ச்சி விளங்கியதுடன், சமூகத்திற்கு நம்மால் இயன்ற குறைந்தபட்சப் பங்களிப்பை வழங்கவும் ஊக்கமளித்துள்ளது. இன்றைக்கு நமக்குக் கிடைத்த சுகமான நினைவுகள் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்’ என்றார்.
ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் ஹெச்டியில் வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் நடுவர்களாகப் பிரபல பின்னணிப் பாடகரும் இசை அமைப்பாளருமான விஜய் பிரகாஷ், பிரபல பின்னணிப் பாடகரான கார்த்திக், என்றென்றும் பசுமையாக மனத்தில் நிற்கும் பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் செயல்படுவர்.
நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதியாக போட்டியாளர்களுடன் இணைந்து மாணவர்கள் கேக் வெட்டிக் கொண்டாடினர். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், ச ரி க ம ப முன்னாள் போட்டியாளர்களுடன் நிழற்படம் எடுக்கும் அமர்வும் நடைபெற்றது.