தெலுங்கு மொழி வெற்றித் திரைப்படமான ‘கார்த்திகேயா – 2’ இன் உலகளாவிய டிஜிட்டல் பிரிமியரை ZEE5 அறிவித்துள்ளது

~ சந்து மொண்டேட்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்தெலுங்கு திரைப்படம் அக்டோபர்-5,  2022 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படும்~

சென்னை: உள்நாட்டு நிறுவனமான, இந்தியாவின் மிகப்பெரிய, வீடியோ ஆன் டிமாண்ட் ஸ்ட்ரீமிங் தளமான ZEE-5, தெலுங்கு மொழி வெற்றித் திரைப்படமான ‘கார்த்திகேயா – 2’ இன் உலகளாவிய டிஜிட்டல் பிரிமியரை இன்று அறிவித்தது. சந்து மொண்டேட்டி எழுதி இயக்கிய, சாகசமும் மர்மங்களும் நிறைந்த இப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹர்ஷா செமுடு, ஆதித்யா மேனன், சீனிவாச ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மற்றும் பழம்பெரும் நடிகர் - அனுபம் கெர் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். கார்த்திகேயா - 2' அக்டோபர் 5 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இத்தளத்தில் திரையிடப்படுகிறது.

பெறும் வரவேற்பு பெற்ற முதல் பாகத்தைத் தொடர்ந்து வெளிவந்த தொடர் பாகமும்  பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வரவேற்பைப் பெற்று 120 கோடிக்கும் மேலான வசூலுடன் பிளாக்பஸ்டர்  திறப்படமாக்ஹா உருவெடுத்தது. இந்து மத புராணங்களை சிறப்பித்துக் காட்டும் இந்த மர்மத் திரில்லரானது, கோவர்தன் கிரி, துவாரகாவின் தெருக்கள், புந்தேல்கண்ட் பாலைவனம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆறுகள் என இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் அண்ட் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள கார்த்திகேயா – 2’ திரைப்படம், கதாநாயகன் கார்த்திகேயா உண்மையைத் தேடிச் செல்வதைப் படம் பிடித்துக்காட்டுகிறது. பண்டைய இந்திய நம்பிக்கை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் தத்துவத்தின் சக்தியைக் கண்டறிய இது அவரை வழிநடத்துகிறது.