வேலம்மாள் பள்ளி மாணவர் அபாகஸில் உலகசாதனை

வேலம்மாள் பள்ளி மாணவர்  அபாகஸில் உலகசாதனை
வேலம்மாள் பள்ளி மாணவர் அபாகஸில் உலகசாதனை.

வேலம்மாள் பள்ளி மாணவர் அபாகஸில் உலகசாதனை.

 

இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஏற்பாடு செய்திருந்த அபாகஸ் சாதனை நிகழ்வு

2021-ஜூலை 31, அன்று சென்னையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மேல் அயனாம்பாக்கம்,

வேலம்மாள் வித்யாலயாவின் 6 ஆம் வகுப்பு மாணவன் எஸ்.ஒய்.கௌசிக், அபாகஸைப் பயன்படுத்தி 3.22 நிமிடங்களில் 75 முறை, மூன்று இலக்க எண்களின் கூட்டுத்தொகையினை மீண்டும் மீண்டும் கணக்கிட்டு

 வெற்றிகரமாக எலைட் உலக சாதனைகளின் வரிசையில் அற்புதமான

தனிநபர் உலக சாதனையைப் படைத்தார்.

 

 அரிதான மற்றும் வியப்பிற்குரியதுமாக அறியப்படும் எலைட் உலக சாதனைகள் உயர் தர அங்கீகாரத்துடன் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாகும்.

இவ்வகையில்

மாணவர் கௌசிக்கின் சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டுகிறது

மற்றும் வாழ்த்துகிறது.