கோவிலில் பெண் அடித்துக்கொலை

கோவிலில் பெண் அடித்துக்கொலை
Women brutally beaten to death by locals in temple

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள அத்திமூதிர் பகுதியில் இன்று கோவிலுக்கு வந்த 5 பேர் அங்கிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்துள்ளனர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தை கடத்துவதற்காக அவர்கள் வந்துள்ளதாக கருதி 5 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Women brutally beaten to death by locals in temple