பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அபிநந்தன்

பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த அபிநந்தன்

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது, இந்நிலையில் இருவருக்கும் நடந்த உரையாடல் வருமாறு:-

பாகிஸ்தான் ராணுவ அதிகாரி:– உங்களை எப்படி நடத்தினார்கள்?

அபிநந்தன் பதில்:– நல்ல முறையில் நடத்தினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கை என்னை கவர்ந்து இருக்கிறது. நான் எனது தாய் நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிறகும் இதையேதான் கூறுவேன். எனது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். எங்கள் ராணுவமும் இதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ராணுவ அதிகாரி:– இந்தியாவில் நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

அபிநந்தன்:– தென் இந்தியாவைச் சேர்ந்தவன்.

ராணுவ அதிகாரி:– நீங்கள் திருமணம் ஆனவரா?

அபிநந்தன்:– ஆம். எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

ராணுவ அதிகாரி:– நீங்கள் குடித்துக் கொண்டிருக்கும் டீ நன்றாக இருக்கிறதா?

அபிநந்தன்:– மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

ராணுவ அதிகாரி:– நீங்கள் ஓட்டி வந்த விமானம் என்ன ரகம்?

அபிநந்தன்:– என்னை மன்னிக்கவேண்டும் மேஜர். நான் அதை உங்களிடம் சொல்லாவிட்டாலும், சிதறிய பாகங்களை வைத்து நீங்கள் அதை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்.

ராணுவ அதிகாரி:– உங்களுடைய நோக்கம் என்ன?

அபிநந்தன்:– மன்னிக்க வேண்டும். அதை நான் உங்களிடம் சொல்லக்கூடாது.

இவ்வாறு அந்த வீடியோவில் உரையாடல் இடம்பெற்று உள்ளது.