பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு

பிரதமரின் முடிவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த அமைச்சரவையில் முடிவு

நாடு தழுவிய அளவில் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு. ஊரடங்கை கடைபிடித்த தமிழக மக்களுக்கு அமைச்சரவை பாராட்டு.காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அமைச்சரவை நன்றி.

 தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு.பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

தமிழத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதலமைச்சர் பரிந்துரை.இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை.ஊரடங்கு மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை என தகவல்.

பிரதமர் எத்தனை நாட்கள் ஊரடங்கை அறிவிப்பார் என்பதை பொறுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்படும் - தலைமைச் செயலாளர்  .டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நோய்த்தொற்றினால் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரணம்