நெருக்கடியில் இருக்கும் சக்தியின் நிலைமை என்னவாகும்? -“கண்ணெதிரே தோன்றினாள்”

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “கண்ணெதிரே தோன்றினாள்” நெடுந்தொடருக்கு இளம் தலைமுறையினர் மற்றும் குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொடரில் நாயகியான சக்திக்கு அவரை வளர்க்கும் தந்தையான ரத்தினம் கல்யாண ஏற்பாடு செய்ய, கல்யாணத்திலிருந்து தப்பித்து, தனது தாய் என்று தெரியாமல் ருத்ராவிடம் தஞ்சமடைகிறாள் சக்தி.

இந்த நிலையில், சக்தியை தன் வீட்டில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார் சிவா. இந்துவும், அனிதாவும் சிவாவிற்கு ஆதரவாக இருக்க, இந்த நெருக்கடியில் சக்தியின் நிலைமை என்னவாகும்? என்பது வரும் நாட்களில் தெரிய வரும் என்பதால் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் ருத்ராவாக மாளவிகா அவினாஷும், சக்தியாக ஸ்வேதா கெல்ஜூம், ரத்னமாக சவுமியனும், ஜீவன், ஜெயஸ்ரீ, சீதா, கவிதா, கோவை பாபு, ரஞ்சித், பூஜா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

“கண்ணெதிரே தோன்றினாள்” திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.