ராஜஸ்தான் திருமண மண்டப விபத்து: மோடி நிதியுதவி

ராஜஸ்தான் திருமண மண்டப விபத்து: மோடி நிதியுதவி
Wall collapsed in Rajasthan Marriage hall Modi announced excratia

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் திருமண மண்டபத்தில் உள்ள 90 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுவர் இடிபாடிகளில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார், மேலும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Wall collapsed in Rajasthan Marriage hall Modi announced excratia