முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரம்
வருகின்ற மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது. வாக்கு நம் உரிமை, வாக்கு நம் ஜனநாயகக் கடமை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர். 100 விழுக்காடு வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவு செய்ய வேண்டியது நம் கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் சொற்பொழிவு ஆற்றினர். மாணவர்கள் மேற்கொண்ட இம்முயற்சி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது.