உள்ளம் உருகுதையா

உள்ளம் உருகுதையா
Vendhar tv new program Ullam Urugudhayia

(திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை மற்றும் மாலை 6.05 மணிக்கு)

வேந்தர் டிவியில் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 6.05 மற்றும் மாலை 6.05 மணிக்கும் ஒளிபரப்பாகும் தெய்வீக நிகழ்ச்சி "உள்ளம் உருகுதையா".

ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகங்கள், தெய்வீக திருமணங்கள் ஆகியவை பக்தி கமழும் பாடல்களின் பின்னணியில் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு உகந்த தெய்வீக பாடல்கள் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி, நேயர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

அபிஷேகம், அலங்காரம் என அழகு திருக்கோலத்தில் ஆண்டவனை தரிசனம் செய்யும் அனைவரின் உள்ளமும் உருகும் என்பதில் ஐயம் இல்லை. காலையும், மாலையும் இல்லங்களை மங்களகரமாய் மாற்றும் இந்த உள்ளம் உருகுதையா நிகழ்ச்சி தெய்வீக மணம் கமழும் நிகழ்ச்சியாய் தினமும் ஒளிபரப்பாகிறது.

Vendhar tv new program Ullam Urugudhayia