'இது எங்க ஏரியா'

'இது எங்க ஏரியா'

வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 3:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி தான் 'இது எங்க ஏரியா'. கிராமத்து மக்களுடன் இன்றைய இளைய தலைமுறையினர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது அரிதாகி வருகிறது. அதை மீட்டெடுத்து ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

கிராமத்தின் அருகில் உள்ள கிராம மக்களை இணைத்துக்கொண்டு நிறைய விளையாட்டு போட்டிகளுடன் பெரிய விழா போல இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இன்னொரு பக்கம் கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி தனியாகவும் நடத்தப்படுகிறது. போட்டிகளில் வெல்பவர்களுக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகினறன.

இந்நிகழ்ச்சியை விக்ரம் உருவாக்க ,செபாஸ்டியன் மற்றும் ப்ரீத்தி இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்துகிறார்கள். ஞாயிறு தோறும் மாலை 3:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.