உடனடி ஆன்மீக நிகழ்ச்சி "இறைவன் அருள்"

உடனடி ஆன்மீக நிகழ்ச்சி "இறைவன் அருள்"
Vendhar tv Show Iraivan Arul

வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் உடனடி ஆன்மீக நிகழ்ச்சி ‘இறைவன் அருள்”.

ஆன்மீக நேயர்கள் அனைவருக்கும் நாடெங்கும் நடக்கும் ஆலய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை அன்றன்றே கொடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்து கோயில்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய தர்காக்களும் இடம்பெறுகின்றன. இந்து ஆலயங்களில் நடக்கும் விசேஷ ஆராதனைகள், தினசரி விழாக்கள், மற்றும் கும்பாபிஷேகம் போன்றவற்றை அன்றன்றே பார்க்கும் விதமாக இரவு 7 :00 மணிக்கு தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகளோடு இஸ்லாமிய மசூதிகளில் நடைபெறும் வழிபாடுகள் மற்றும் தொழுகைகளும் இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டில் தினமும் நடைபெறும் மும்மத விழாக்களை அனைவரும் கண்டு அருள்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒளிபரப்பாகும் இந்த ‘இறைவன் அருள்’ நிகழ்ச்சி, ஆன்மீக நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Vendhar tv Show Iraivan Arul