“தேனிசை கானம்”

வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “தேனிசை கானம்” .
பழைய பாடல்களின் தொகுப்பாய் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பனப்பாக்கம் கே.சுகுமார் தொகுத்து வழங்குகிறார். கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப்படங்களில் இடம்பெற்ற பல காவியப்பாடல்கள் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .
காலத்தை வென்ற இந்த பாடல்களில் இனிமையையும், கருத்துச்செறிவுகளையும், எல்லோரும் அறியும் வகையில் எடுத்து சொல்லும் இவரது முன்னுரை, இந்த பாடல்களின் சிறப்பைக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
தேனினும் இனிமையான கானங்கள் இடம் பெரும் இந்த தேனிசை கானம் ..வேந்தர் டிவி நேயர்களுக்கு இனிய விருந்தாய் அமைந்து, நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது .